கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு வாழ்வியல் தொடர்பான புதிய திறனறிவு பாடத்திட்டம்

மருத்துவம்,சட்டம்,கணிணி என பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி பட்டறை வழங்கும் புதிய முயற்சி

கோவைபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு,மொழி,கலை,என பல்வேறு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்..

இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி சாரா வாழ்வியல் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் கல்வி பயிலும் போதே அவர்களது தனித்திறன்களை ஆய்வு செய்து அது தொடர்பான துறை வல்லுனர்களை கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பயற்சி வழங்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்…

ஆஸ்ரம் பள்ளியில் பயின்ற முன்னால் மாணவர்கள் சங்கத்தின் பங்களிப்புடன் நடைமுறை படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் நோக்கம்
குறித்து பள்ளியின் நிர்வாகி கவுரி உதயேந்திரன் கூறுகையில், முதல் கட்டமாக ஆறாம் வகுப்பு பயலும் மாணவர்களுக்கு அவசர கால நேரத்தில் செயல்படுவது,முதலுதவி சிகிச்சை தொடர்பான பயிற்சிகளும் 10,மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாதிச்சான்றிதழ்,வருமான சான்றிதழ்,ஆதார் கார்டு திருத்தம்,தகவல் உரிமை சட்டம் போன்ற அரசு தொடர்பான ஆவணம் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறை பயிற்சிகள்,வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்..

ஆஸ்ரம் பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு துறைகளில் சாதித்து வரும் முன்னால் மாணவர்களை கொண்டு இந்த பயிற்சி வகுப்புகளை வழங்க உள்ளதாக தெரிவித்த அவர்,

பள்ளியில் பயிலும் போதே மாணவர்களின் எதிர்கால துறை ஈடுபாடுகளை கண்டறிந்து அதில் அனுபமிக்க வில்லுனர்களை கொண்டு பயிற்சிகள் வழங்க உள்ளதாக தெரிவித்தார்..

இதனால் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லும் மாணவர்கள் எந்த வித குழப்பமும் இல்லாமல் தங்களது விருப்பமான துறை சார்ந்த பாடங்களை தேர்வு செய்து படித்து அதில் வெற்றியும் பெற இயலும் என தெரிவித்தார்…

முன்னதாக நடைபெற்ற மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் துவக்க விழாவில் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் மற்றும் கவுரி,செயலர் ரவிக்குமார், நிர்வாகி உதயேந்திரன்,வித்யாஸ்ரம் பள்ளி இயக்குனர் சவுந்தர்யா,ஆஸ்ரம் பள்ளி முதல்வர் சரண்யா,முன்னால் மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர் பவித்ரா பிரியதர்ஷினி,மற்றும் மௌலிகா உட்பட ஆசிரிய,ஆசிரியைகள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்…

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *