கந்தர்வ கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் சார்பில் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
ஆங்கில ஆசிரியர் சிந்தியா அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா நுகர்வோர் உரிமைகள் தினம் குறித்து பேசும் பொழுதுநுகர்வோர் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது,
இது நுகர்வோர் உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நாளாகும்.
நுகர்வோர் உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.நுகர்வோர் உரிமைகள் மற்றும் தேவைகள் பற்றிய விழிப்புணர்வு. அனைத்து நுகர்வோரின் அடிப்படை உரிமைகளையும் மேம்படுத்துவதற்கும், அந்த உரிமைகள் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதை ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் ஒரு வாய்ப்பாகும்.
1983 ஆம் ஆண்டு முதன்முதலில் அனுசரிக்கப்பட்ட உலக நுகர்வோர் உரிமைகள் தினம் , நுகர்வோர் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. 1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி ஆற்றிய உரையை நினைவுகூரும் வகையில் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது , அப்போது அவர் நுகர்வோர் உரிமைகளை முறையாக அங்கீகரித்த முதல் உலகத் தலைவர் ஆனார்.
நுகர்வோர் பாதுகாப்பு என்பது, வாங்குபவர்களையும் பொதுமக்களையும் சந்தையில் நியாயமற்ற நடைமுறைகளுக்கு எதிராகப் பாதுகாக்கும் ஒரு நடைமுறை ஆகும். நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் சட்டத்தால் நிறுவப்பட்டுள்ளன, மேலும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவரும் பங்கு வகிக்கின்றனர்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, நுகர்வோரின் உரிமைகளை வரையறுத்து செயல்படுத்துகிறது. இதில் பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, கேட்கப்படுதல் உரிமை மற்றும் தீர்வு பெறும் உரிமை ஆகியவை அடங்கும்
என்று பேசினார். நுகர்வோர் உரிமைகள் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.