கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்கம்
ரம்மியமான சூழலில் விசலாமான கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய மையத்தை பிரபல மலையாள பட இயக்குனர் சிபி மலயில் திறந்து வைத்தார்
கோவை கே.ஜி.சாவடி பகுதியில் ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
பியூச்சர் கேரீயர் குழுமங்களின் நிர்வாக இயக்குனர்,
ஹார்மனி கன்வென்ஷன் மையத்தின் இயக்குனருமான மனோஜ் மனயத்தோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல மலையாள பட இயக்குனர் சிபி மலயில் கலநரது கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார்.
விழாவில் கவுரவ விருந்தினர்களாக பிரபல நடிகை அதிதி ரவி,இயக்குனர் சுந்தர் தாஸ்,சவானி குழுமத்தின் அறங்காவலர் சவானி ஆகியோர் கலந்து கொண்டனர்..
புதிதாக துவங்கப்பட்ட ஹார்மனி கன்வென்ஷன் மையம் குறித்து மனோஜ் மனயத்தோடி கூறுகையில்,நல்ல விசாலாமான கார் பார்க்கிங் வசதிகளுடன் உள்ள இந்த அரங்கம் திருமணம் போன்ற அனைத்து சுப நிகழ்ச்சிகள் மற்றும் சிறிய பிறந்த நாள் விழா போன்ற நிகழ்ச்சிகள், அரசியல் தொடர்பான கூட்டங்கள் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏற்றவாறு வசதிகள் இருப்பதாக தெரிவித்தார்..
கூடுதலாக இந்த மையத்தின் மேல் தளத்தில் விசலாமான ஹால் இருப்பதாகவும்,
இங்கு மீடியா தொடர்பான பயிற்சிகள்,கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான திறனறிவு பயிற்சி மையங்கள் விரைவில் துவங்க உள்ளதாக தெரிவித்தார்..
தமிழக கேரளா எல்லை அருகே இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள ஹார்மனி கன்வென்ஷன் சென்டர் அனைத்து விழாக்களுக்கும் நல்ல வசதிகளுடன் குறிப்பாக விசாலமான டைனிங் ஹால், காற்றோட்டமான விருந்தினர்கள் தங்கும் அறை,பாதுகாப்பான சூழல் என அனைத்து வசதகளும் இருப்பதால் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது..
துவக்க விழாவில் நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்…