கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே டிராக்டர் வைத்து உழவு ஓட்டியும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டும் தக்காளி பயிர்களை அழித்து வரும் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க மத்திய மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை……..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நொச்சிப் பாளையம், காளிநாதன் பாளையம், குப்பிச்சிபாளையம், அல்லாளபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். உரிய விலை கிடைக்காமல் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாவதால் தக்காளி செடிகளை விவசாயிகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குப்பச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயிகள் மூன்று ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளனர். மூன்று ஏக்கருக்கு உழுவதற்கு 17,000 ஆயிரம் ரூபாயும், நாற்றுக்கு முப்பதாயிரம் ரூபாயும், நாற்று நடுவதற்கு 28 ஆயிரம் ரூபாயும் மருந்து உரத்திற்கு 60 ஆயிரம் ரூபாயும் செலவு செய்து தக்காளி பயிரிட்டுள்ளார்.
தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு ஐந்து ரூபாய் செலவாகுதாகும், தற்பொழுது ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு விற்கப்படுவதால் ஒரு கிலோ தக்காளி 30 முதல் 40 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும் என்பதாலும் உரிய விலை கிடைக்காததால் தக்காளிச் செடிகளை நிலத்திலேயே உழவு ஓட்டி அளித்துள்ளார். இதனால் மூன்று ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான விவசாயிகள் தற்காலிக உரிய விலை கிடைக்காததால் தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டும், களைக்கொல்லி மருந்து தெளித்தும், டிராக்டர் மூலம் உழவு ஓட்டி செடிகளை அழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
செடிகளை அழித்தால் பற்றாக்குறை ஏற்பட்டு தற்காலி விலை உயரும் என்ற நம்பிக்கையில் இப்படி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தக்காளி நட்டால் தங்கம் வாங்க முடியாது தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர்.
மத்திய மாநில அரசுகள் விவசாய உற்பத்தி பொருள்களுக்கு விவசாய கமிட்டியின் அறிக்கை படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் விளைந்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே தக்காளி செடிகளை விவசாயிகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேட்டி:
செந்தில்குமார்( விவசாயி, அல்லாளபுரம்)