மதுரை மத்திய சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக 3 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை மத்திய சிறைச்சாலையில் 2500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் கைப்பேசி,போதைப்பொருட்கள் வைத்துள்ளனரா ? என அவ்வப்போது திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, மதுரை மத்திய சிறைச்சாலையில் மாநகர காவல் துறை, சிறைத்துறை சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் காவல் துணை ஆணையர் தலைமையில் 3 உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் கள், 100 காவலர்கள், சிறைக் காவலர்கள் 3 மணி நேரம் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், கழிப்பறைகள், சமையறை, தோட்டம், சிறை அலுவலர்கள் அறைகள் உள்ளிட்டஅனைத்துப்பகுதி களிலும் சோதனை நடை பெற்றது. சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையிலும் மகளிர் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இச் சோதனையை சிறைத்துறை மதுரை சரக துணைத் தலைவர் முருகேசன், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் ஆகியோர் பார்வையிட்டனர். சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.