கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் ரூபாய் 22 லட்சம் செலவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி எம்எல்ஏ கலந்து கொண்டார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்
செ .கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை வகித்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்,
இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் வாவை ஜாஹீர் உசேன், தென்காசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வல்லம் எஸ் ஆர் ராமச்சந்திரன், பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்றத் தலைவர் பொறியாளர் க.இ.வேலுச்சாமி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் அருண், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் முகமது உசேன், மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் வேம்பு ரவி, ஒன்றிய அவைத்தலைவர்நவநீதகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் எம் எம் ஹனீபா, ஈஸ்வரி மாவட்ட பிரதிநிதிகள் சுப்பையா பாண்டியன், பேச்சிமுத்து, பூத் கமிட்டி தலைவர் இஸ்மாயில், கிளை செயலாளர்கள் குரு முருகன், ஐயப்பன், கணேசன், பண்டாரம், நாட்டாண்மை கருப்பசாமி, வீராசாமி, முத்துசாமி, மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.