மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், திருக்கானை தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, மதுரை கிழக்கு வட்டார மைய மேற்பார்வையாளர் பொறுப்பு மஞ்சுளா தேவி தலைமையில் நடைபெற்றது. மதுரை வடக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பாக்கிய ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் விஜயா தேவி வரவேற்றார்.
மதுரை கிழக்கு வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்தர் இந்திராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைகளுக்குச் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினார். விழாவில் குழந்தைகளின் பரதம், நடனம், தமிழ் ஆங்கில நாடகங்கள், யோகா, கரகாட்டம், மாறுவேடப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் சரவணகுமார் தொகுத்து வழங்கி, நன்றி கூறினார்.
விழாவில் புரவலர் திட்டம் தொடங்கப் பட்டு, ரூ12,000 நன்கொடையாக பெறப்பட்டது. விழாவில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான்சி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சாந்தி, அருகில் உள்ள பள்ளிகளின் முன்னாள், இந்நாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.