திருச்சியில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.

அக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் திரு.T.தேவிசெல்வம் தலைமை தாங்கினார்.சங்க மாநில பொதுச்செயலாளர் முனைவர்.வெ.பெரியதுரை , மாநில பொருளாளர் முனைவர்.K.தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.சங்க செயல்தலைவர் திரு.R.சீனிவாசன், மாநில செயலாளர் திரு.R.இராஜா சுரேஷ் வாழ்த்துரை வாழங்கினார்கள்.கலந்து கொண்ட அனைவரையும் மாநில இணைச்செயலாளர் திரு.R.கருணாகரன் வரவேற்றுத் பேசினார்.அக்கூட்டத்தில் மாநில/மாவட்ட நிர்வவாகிகள் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள் படி, கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1.அனைத்து உயர்/மேல் நிலைப்பள்ளிகளுக்கு உடற்கல்வி இயக்குநர் நிலை இரண்டு & நிலை ஒன்று பணியிடம் உருவாக்கி, ,உடற்கல்வி ஆசிரியர்காளுக்கு பதவி உயர்வு வவ வழங்க வேண்டும்
2.அனைத்து தொடக்க,நடுநிலை பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்,
3.அனைத்து மாணவ/மாணவிகளுக்கும் உடற்கல்வி புத்தகம் வழங்க வேண்டும்,
4.அரசாணை 177 யில் திருத்தம் செய்து, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்
5.ஜாக்டோ ஜியோ 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்
6.சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு வரும் மே மாதத்திற்குள் நடத்த வேண்டும் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக சங்க அமைப்பு செயலாளர் திரு.S.செல்வம் நன்றி கூறினார்.