வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: விவசாயிகள் அதிருப்தி….
தமிழக அரசின் வேளாண் துறை
நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில கௌரவத்தலைவர் எம்.பி.ராமன்: மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கும் முக்கிய நீராதாரமாக உள்ள வைகை அணையைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நிதி நிலை அறிக்கையில் அறி விப்பு இல்லாததும், மல் லிகை உற்பத்தியில் சிறப்பிடம் பெற்றுள்ள மதுரையை மையப்படுத்தி வாசனைத் திரவியத் தொழிற்சாலை அமைப்பது குறித்த அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக் கிறது என எம்.பி.ராமன் தெரிவித்தார்.