அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
கடந்த நான்கு மாத காலத்திற்கு மேலாக வழங்கப்படாமல் காலதாமதப்படுத்தும் 100 நாள் பணிக்கான ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலையை வழங்க வலியுறுத்தியும் 100 நாள் சம்பள பாக்கி வழங்காத ஒன்றிய அரசு கூடுதலாக 5 % பணப்பலன் சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் நல சங்கம் மாவட்ட செயலாளர் தவமணி தலைமையில் சி பி ஐ எம் மாவட்ட குழு உறுப்பினர் உமா மகேஸ்வரன் மற்றும் சங்க நிர்வாகிகள் பாண்டி ஆறுமுகம் சௌந்தரராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.