இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 07-03-2025 அன்று ராயபேட்டை YMCA மைதானத்தில் நடை பெற்ற ரமலான் நோன்பு இப்தார் நிகழ்ச்சி இஸ்லாமிய இயக்க தலைவர்கள் மற்றும் ஆலீம்களும் ஒரு சிலர் கலந்து கொண்டு ஆதரவு அளிக்கும் வகையில் நடந்து கொண்டது மிகுந்த வருத்ததை தருகிறது .

அதிகாலை நேரம் 4.30 தொடங்கி மாலை நேரம் 6.25 வரையிலும் – சாப்பாடு – குடிதண்ணீர் – எச்சில் விழுங்காமல் – கெட்ட வார்த்தைகள் மற்றும் கெட்ட செயல்கள் இருக்க கூடாது – மேலும் தொழுகைகள் போன்ற பல்வேறு கட்டு பாடுகளை கட பிடித்து விஜய் நோன்பு வைத்தாரா இருக்காது ? ஏனென்றால் இவ்வளவு கட்டு பாடுகளுடன் விஜய் நோன்பு வைக்க முடியாது என்பது தான் எதார்த்தமான உண்மை இதனை நன்றாக தெரிந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் புனித மான ரமலான் நோன்பின் கன்னியத்தை குறைக்கும் வகையில் நடந்து கொண்டது ஏற்க்க தக்கதல்ல.

துப்பாக்கி – பிஸ்ட் போன்ற திரைபடங்களில் காசுக்காக இஸ்லாமியர்களை திவீர வாதிகளாகவும் – பங்கர வாதிகளாகவும் சித்தரித்து விஜய் நடித்துள்ளார். இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புகளை திரைப்படம் முலம் அன்றே காட்டியவர் தான் விஜய்.தமிழக வெற்றி கழகத்தின் பேனர் – போஸ்டர் – லட்டர் பேடுகளில் மற்ற சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கின்றனர்.
ஆனால் இஸ்லாமிய சமுதாய மக்கள் நலனுக்காக போராடிய ஒரு இஸ்லாமிய தலைவர்களின் புகை படங்கள் கூட இல்லை. ஆகவே மீண்டும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை உறுதி செய்கிறார் விஜய் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியர்களும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

பொது மக்களுக்களின் பல் வேறு பிரச்சனைகளை கையில் எடுத்து போராடி கொண்டிருக்கும் தலைவர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு கொடுக்க வில்லை. ஆனால் விஜய் கட்சி தொடங்கும் முன் Y+ பாதுகாப்பு கொடுக்காத ஒன்றிய பா ஜ க அரசு விஜய் கட்சி தொடங்கியவுடன் விஜய்க்கு Y+ பாதுகாப்பு ஒன்றிய பா ஜ க அரசு கொடுத்திருக்கு ஏன்றால் இனி வரும் தேர்தல் காலங்களில் பா ஜ கவுடன் விஜய் கூட்டனிக்கு வருவார் என்கிற அடிப்படையில் கூட இந்த Y+ பாதுகாப்பு கொடுத்திருக்கலாம் ? இல்லை ஏன்றால் மக்களுக்கு தெரியாமல் ரகசியமாக கூட பா ஜ கவுடன் கூட்டணியில் விஜய் இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது ?

எனவே : இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ கூடிய பகுதியான ராயபேட்டை YMCA மைதானத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவத்ற்க்காக நடை பெற்ற இந்த இப்தார் நிகழ்ச்சி என்பதை இஸ்லாமியர்கள் சிந்திக்க வேண்டும் . ஆகவே இஸ்லாமிய சமுதாய நலன் கருதி தேர்தல் காலங்களில் விஜய்க்கு வாக்குகள் போடுவதை இஸ்லாமியர்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Share this to your Friends