ராமநாதபுரம் மாவட்டம்
கமுதியில் கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பில் நடத்தப்படும் கல்வித்தந்தை பி.கே .மூக்கையாத்தேவர் இலவச அரசு போட்டி தேர்வு மையத்தில் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது

முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகி வரலாற்று துறை பேராசிரியர் வாகை எம். பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் க.காளிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர், சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் மு.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று பேசினார்,

மகளிர் தினத்தை போற்றும் வகையில் ஸ்ரீ பகவதி அறக்கட்டளையின் தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன் கலந்து சமுதாயத்தில் மகளிர் பங்கு பற்றியும், பல்வேறு துறைகளில் பெரும் சாதனையாளர்கள் மகளிர் தான் உள்ளார்கள்

அதனைபோல போட்டித்தேர்வில் அனைவரும் வெற்றி பெற்று உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என கூறி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் டைரி, பேனா, தொப்பி, கீ செயின் ஆகியவை வழங்கப்பட்டது ,

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொருளாளர் முத்துகிருஷ்ணன், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள், சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் நன்றி கூறினார்.

Share this to your Friends