பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மருத்துவ சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி -பெண்கள் ,குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடையில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் இனியன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் இமாம் அப்துல் பாஸித் ஃபைஜி சிறப்புரை வழங்கினார் இதில் உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பள்ளிவாசல் இமாம் முகம்மது இக்பால் (இல்ஹாமி ஆலிம் ),பரிதா பஷிர்,ஜாப்ஜான் மற்றம் பண்டாரவாடையை சுற்றியுள்ள ஜமாத்தார்கள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், இமாம்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனையிலும் ஈடுபட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.