சின்னமனூரில் மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நகரத் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜக நகரத் தலைவர் சிங்கம் தலைமையில் நகரின் இதய பகுதிகளான மார்க்கையன்கோட்டை ரவுண்டானா ரோடு காந்தி சிலை கண்ணாடி கடை மூக்கு உட்பட நகரின் பிரதான வீதிகளில் சென்று மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கொள்கை சட்டத்தை ஆதரித்தும் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு ஏராளமான பொது மக்களிடம் கையெழுத்துக்கள் வாங்கியும் இந்த சட்டத்தால் தமிழக மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கி பேசப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் பாஜக நகர் முன்னாள் தலைவர் இ. லோகேந்திர ராஜன் நகர சின்னமனூர் நகர் பொதுச் செயலாளர் சசி பிரபு மன்ற உறுப்பினர்கள் நகர பாஜக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்