தஞ்சாவூர் மாவட்டம்:
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட , ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஊரணிபுரம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஆர். கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை, மாவட்ட பொருளாளர் கே.பி.துரைராஜ் ,திருவோணம் ஒன்றிய தலைவர் வி .பி. பெரியகருப்பன், ஒன்றிய செயலாளர் C.ரவி, துணைச் செயலாளர் வ.பெ.தங்கராசு ,பேராவூரணி ஒன்றிய தலைவர் எம்.கோபிநாத் ,ஒன்றிய செயலாளர் ஆர். பாலச்சக்கரவர்த்தி , ஒன்றிய பொருளாளர் எஸ்.கணேசன் ,மாவட்ட, ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் A.சேதுராமன், எஸ்.ராஜேந்திரன், ஆர் .கே.பழனிவேல் ,சி.குமார் ,A.P. சுரேஷ் , அ.ராமராஜன், எம்.பெரியசாமி , பி.சீனிவாசன்,M.முத்துச்சாமி, கே.தங்கராசு, எம்.கோபாலகிருஷ்ணன், ஜி.ராமமூர்த்தி , சி.பாஸ்கர், தொ.பொ.கோவிந்தராஜ் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கடந்த சில மாதங்களில் நடைபெற்ற சங்கம் பணிகள் குறித்தும்,எதிர்காலங்களில் செய்ய வேண்டிய சங்க பணிகள் குறித்தும் ,மாவட்டம் முழுமையும் பல கிராமங்களில் சங்க ஸ்தாபனங்களை அமைப்பது எனவும்,நமது சங்கத்தின் மாவட்ட மாநாடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஊரணிபுரத்தில் சிறப்பான முறையில் நடத்த ஏக மனதாக திட்டமிடப்பட்டுள்ளது.அதன் தொடர்பாக சங்க நிர்வாகிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டது
,நடப்பாண்டு (2024) சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டும் ,அதேபோல் உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்கள் நடப்பட்டும் இருந்த வேளையில் பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழையால் நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் பாதிக்கப்பட்டதால் …?
பாதிக்கப்பட்ட நெல், கடலை ,உளுந்து உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய வெள்ள நிவாரணமும், காப்பீடு செலுத்தப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பயிர் இழப்பீட்டு தொகை பெற்றுக் கொடுக்கவும் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் முன்வர வலியுறுத்தி இக்கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
திருவோணம் , பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்டம் முழுமையும் உள்ள தாலுக்கா பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளால் முறைகேடாக, மோசடியாக சிட்டா, அடங்கள் உள்ளிட்ட கணக்குகள் வழங்கப்பட்டும்,தவறான பட்டா மாற்றம் செய்யப்பட்டும் பல பதிவுத்துறை அலுவலகம் மூலம் பதிவுத்துறை அலுவலர்கள் உதவியோடு மோசடி கும்பல்கள் மோசடியாக கிரைய ஆவணங்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இந்த மோசடி குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் பலமுறை மனு மேல் மனு அளித்தும் இன்னும் சில மோசடி கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வராமல் கடைப்பிடித்து வரும் போக்கை கைவிட மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கேட்டுக் கொண்டும் ,இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தடுத்து நிறுத்திடவும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை , பதிவுத்துறை அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கையும், துறை ரீதியான கடும் நடவடிக்கையும் எடுத்திட இக்கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
நடப்பாண்டு தமிழக அரசாலும், மாவட்ட நிர்வாகத்தாலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி , வெண்ணாறு , கல்லணை கால்வாய் , அக்னியாறு கோட்டத்திற்கு உட்பட்ட ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்டவை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பல தூர்வாரும் பணிகளை தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் திட்ட மதிப்பீடு செய்த ஏரி, குளங்கள்,வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களை வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் எவ்வித ஒளிவு மறைவின்றியும், முறைகேடுன்றியும் தூர்வாரும் பணிகளைத் துவங்கிட இக்கூட்டம் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காவிரி , வெண்ணாறு , கல்லணை கால்வாய் , அக்னியாறு கோட்டத்திற்கு உட்பட்ட பல இடங்களில் கட்டுமான பணி மற்றும் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் தற்போது பல இடங்களில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்ப பணிகளை முறைகேடுன்றி தரமாகவும் , செம்மையாகவும், திட்டம் மதிப்பீட்டின் அடிப்படையில் சிறந்த முறையில் பணிகளை செய்திட மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் சிறப்பு கவனம் செலுத்த இக்கூட்டம் ஏக மனதாக தீர்மானிக்கப்படுகிறது
மேற்கண்ட உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில்
மாவட்ட பொருளாளர் கே.பி துரைராஜ் நன்றி கூறினார்