தஞ்சாவூர்,ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், . ஜாக்டோ ஜியோ சார்பில் நடக்கும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மாவட்ட செயலாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில் பாலசுப்பிரமணியன், பூபதி, சித்தானந்தன், பன்னீர்செல்வம், ராஜகோபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.