கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில் மாடு பிடி வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு…
லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அழகுமலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாக மற்றும் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது இதில் சுமார் 800 காளைகள் பங்கேற்றுள்ளன மேலும் 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் காளைகளை அடக்க கலந்து கொண்டுள்ளனர்
பத்து சுற்றுகளாக நடைபெற உள்ள போட்டியில் ஒரு சுற்றுக்கு50 மாடுபிடி வீரர்கள் விதம் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் மருத்துவக் குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்யும் இடத்தில் மாடு பிடி வீரர்கள் முந்தி சென்ற முயன்றனர்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்ற போது போலீசாருக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது மாடுபிடி வீரர்கள் மீது லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர் முதல் சுற்று போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் போலீசாருக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.