தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் பணியாற்றிவரும் சமையலருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வருபவர் தமிழரசி. இவர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல முறையில் உணவு சமைத்து தருவதை பள்ளி பெற்றோர் சார்பில் பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.தேவகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் , போக்குவரத்து காவல் சப் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஆகியோர் சமையலர் தமிழரசிக்கு பாராட்டி பரிசு வழங்கினார்கள்.நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதர் உட்பட ஏராளமான பெற்றோர்கள் சமையலரின் பணியை பாராட்டி பேசினார்கள்.