கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பெருமானின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் கோவை பிரசித்தி பெற்ற அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மருதமலை கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஶ்ரீ அன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக காலை முதல் மாலை வரை அன்னதானதம் வழங்கப்பட்டது காலையில் வெண்பொங்கல் , கேசரி,மதியம் வெரைட்டி ரைஸ்,மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் கந்த சஷ்டி புத்தகம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது.
இந்த அன்னதான நிகழ்ச்சியில் பங்களிப்பாளர்களாக சாவித்திரி போட்டோஸ் குரு,வெங்கட் பைவி பம்ப்ஸ்,ஆனந்தகல்யான ராமன்,பெஸ்ட் லாஜிஸ்டிக்ஸ் ஸ்ரீனிவாசன்,கார்னேஷன் கிரயேஷன் நாதன்,கன்னிகா டிரேடிங் ஹவுஸ் நடராஜன்,சித்ரா எண்டர்பிரைசஸ் சுகுமார்,ஐயப்பன்,பாலாஜி ஆழ்வார்,சங்கர்ராமன்,சுந்தரவாத்தியார்,ஜி.வி.ஆடியோ விஷன் அருண் ,ஜெயராமன்,ஹரிஹரன்,ஆனந்த் அரவிந்த் பில்டர்ஸ்,சந்திரமௌலி,பாஸ்கரன்,கிருஷ்ண மூர்த்தி,ஸ்ரீதர்,ராமமூர்த்தி ஈரோடு,ரேவதி ராதாகிருஷ்ணன், ராமநாதன் மதுரை,விஸ்வநாதன், ஆதர்ஷ் சிவராமன் மற்றும் அன்னபூரணி உரிமையாளர் கே.எஸ் மாதவன் ,அன்னபூரணி மாதவன், எம்.கார்த்திக் , விஜயலக்ஷ்மி கார்த்திக் அனைவரும் இணைந்து தைப்பூச விழா அன்னதானத்தை சிறப்பித்தனர்.