பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” எனும் மையக்கருத்துடன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ள இந்த மாநாட்டிற்கான திடல் விருத்தாசலம் அருகே உள்ள திருப்பெயரில் தயாராகிவரும் நிலையில், அங்கு பந்தல் அமைத்தல், பல்வேறு அரங்கங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை இன்றைய தினம் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன் அவர்களுடன் இணைந்து நேரில் ஆய்வு செய்து, ஆலோசனைகள் வழங்கினர்