தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபி எஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி
மாணவி பிரபாஸ்ரீ 97.4% மதிப்பெண்கள் பெற்று அனைத்து பாடங்களிலும் ஏ 1 கிரேடு பெற்று பள்ளியின் முதலிடமும் தமிழில் 100க்கு100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். மேலும் மாணவர் அருணாச்சலம் 94.4% பெற்று அனைத்து பாடங்களிலும் ஏ1 கிரேடு பெற்று 2ம் இடமும், தமிழில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
சிபி எஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை
குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியின் சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான திருமலை, தாளாளர் அன்பரசி திரு மலை, கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தாளாளர் ராபர்ட் பெல்லார்மின், முதன்மை முதல்வர் ஆனிமெடில்டா, கேம்பிரிட்ஜ் இண் டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி இயக்குனர் ஜோசப் லியாண்டர், ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியின் சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான மிராக்ளின் பால்சுசி, சீனியர் முதல்வர் ஜெயஜோதி பிளாரன்ஸ், முதல்வர் சௌமியா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.