தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது.

குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் வனப்பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருக்குற்றாலத்திற்கு இணையான அகஸ்தியர் அமர்ந்த பொதிகை மலையில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திரு விழா கடந்த 3ம்தேதி காலையில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் ஒவ்வொரு
சமுதாய மண்டகப்படி சார்பில் சிறப்பு அபிஷேக. அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.

இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மனுக்கு காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள், இர வில் சிறப்பு அலங்கார தீபாராதனைகள், வில் லிசை, நள்ளிரவில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று தீர்த்தவாரியை முன்னிட்டு காலையில் மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு நறு மணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து. செண்பகாதேவி உற்சவர், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பின்பு செண்பகாதேவி அருவிக்கரை அருகில் உள்ள தீர்த்தவாரி மண்ட பத்தில் உள்ள அகஸ்தியர் பாதத்தில் வைத்து அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செண்பகாதேவி அருவியில் சந்தனம், பன்னீர், குங்குமம், மலர்க ளால் மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. அப் போது அருவி தடாகத் தில் உள்ள தண்ணீரில் மஞ்சள் கலந்து மஞ்சள் நீராக காட்சியளித்தது. தொடர்ந்து அம்மன் வீதியுலா நடத்தப்பட்டு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.அதன்பின் மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப் பட்டது.

இந்த விழாவில் செண்பகாதேவி அம்மன் கோவில் கட்டளைதாரர்கள் மற்றும் அகஸ்தியர் சத்சன்மார்க்க சபை முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், சரவண சேதுராமன், சர்வோதயா கண்ணன்,
உட்பட ஏராளமான பக் தர்கள் கலந்து கொண்ட னர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணை யர் அன்புமணி, அறங் காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன், உதவி ஆணையாளர் ஆறுமு கம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், ராமலட்சுமி, சுந்தர்ராஜ், வீரபாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் காசி மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் படி உதவி வன பாதுகாவ லர் நெல்லைநாயகம், தென்காசி வனச்சரக அலுவலர் செல்லத்துரை, குற்றாலம் பிரிவு வனவர் சங்கர்ராஜா, வனவர் மோகன், வனக் காப்பாளர் முத்துசாமி மற்றும் குற்றாலம் போலீசார் செய்திருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *