மதுரை சித்திரை திருவிழா தங்க பல்லக்கில் பவனி வந்த மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர்

மதுரை சித்திரை திருவிழாவில் தங்கப்பல்லக்கில் பவனி வந்து பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளிய மீனாட்சிஅம்மன் , சுந்தரேஸ்வரரை . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மனும், சுவாமியும் நாள்தோறும் மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
நேற்று சுவாமியும், அம்மனும் தெற்குமாசி வீதி, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவக்காய் மண்டகப்படிக்கு நேற்று காலையில் சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்து
சுவாமி, அம்மனும் தங்க பல்லக்கில் எழுந்தருளினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் மாற்றி விடப்பட்டது. பின்னர் சுவாமியும், அம்மனும் கோவிலுக்கு புறப்பட்ட னர். மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள தர்காவை கடந்து சுவாமி, அம்மன் ஊர்வலம் சென்றது.
அப்போது தர்கா நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு ரோஸ்மில்க் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் இவ்வாறு தர்கா சார்பில் பக்தர்களுக்கு குளிர்பானங்கள் கொடுத்து வருவது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகும்.