திருவள்ளூர்
பெருவாயல் ஊராட்சியில் உள்ள அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பெருவாயல் ஊராட்சி இந்த ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில் கோவில் பழுதடைந்த நிலையில் இருந்ததையடுத்து கிராம பொதுமக்கள் மற்றும் தனியார் மூலம் நிதி வசூல் செய்து பல லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது.
பின்னர் கடந்த இரு தினங்களாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று நேற்று காலை சுமார் 9:30 முதல் 10:30 மணிக்குள்ளாக ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கருட அஷ்ட தந்தன மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக் கும்பாபிஷேக விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி ஜே கோவிந்தராஜன், பெருவாயல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர்,உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிக ளான கோவிந்தன்,மணி சுப்பிரமணியன், திருமுகம், மாரி, எட்டியப்பன், செல்வராஜ், டில்லிபாபு, மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
