க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி திறந்து வைத்தார்
கோவை உக்கடம் பகுதியில் உள்ள இளைஞர்கள் இணைந்து க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு எனும் சமூக நல்லிணக்க அமைப்பின் மூலமாக பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர்..
இந்நிலையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில் க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது..
இதற்கான துவக்க விழா, கிரீன் கார்டன் நண்பர்கள் குழு நிர்வாகிகள் ஹக்கீம், இப்ராஹிம்,அசாருதீன், மைதீன்,முபாரக்,காஜா மொய்தீன் மற்றும் பதுருதீன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினராக பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை துவக்கி வைத்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி,ஜூஸ் ,வாட்டர் பாட்டில் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில்,பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாஹீர் ராதாகிருஷ்ணன் முகமது அலி காமராஜ் கோவை தல்ஹா சண்முகம் நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்…