சிறப்பு குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் புதிய முயற்சியாக இந்தியாவிலேயே முதன் முறையாக கோவை கௌமாரம் பிரசாந்தி அகாடமி சார்பாக சஹா எனும் ஒருங்கிணைந்த மையம் கோவையில் துவக்கம்
மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ளோர் ஒருங்கிணைந்து ,நெசவு நிலையம் மற்றும் காஃபி ஷாப் நடத்த உள்ள இந்த மையம் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது
கோவையில் சிறப்பு குழந்தைகளை பராமரித்து வரும் கௌமாரம் பிராசந்தி அகாடமி இந்தியாவிலேயே முதன் முறையாக சிறப்பு குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்றும் புதிய முயற்சியாக கோவையில் சஹா எனும் ஒருங்கிணைந்த மையத்தை துவக்கி உள்ளனர்..
(Be You Cafe) எனும் காஃபி ஷாப்,அத்வயா எனும் நெசவு நிலையம் மற்றும் இசை என பொழுது போக்கு அம்சங்களுடன் பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் துவங்கப்பட்டுள்ள சஹா மையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் திறந்து வைத்தார்..
துவக்க விழாவில் கவுரவ அழைப்பாளராக கவுமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டார்..
இது குறித்து கௌமாரம் பிரசாந்தி அகாடமியின் இயக்குனர் தீபா மோகன்ராஜ் கூறுகையில், சிறப்புத் தேவைகள் உள்ள நரம்பியல் குறைபாடு உள்ளோர் என 18 வயது வந்தோர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, தொழில் முனைவோர்களாக மாற்றி சுயசார்புடன் வாழ்வதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த மையத்தை துவங்கி உள்ளதாக தெரிவித்தார்..
மேலும் இந்த சஹா ஒருங்கிணைந்த மையம் அவர்களுக்கு சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கவும், தங்களது வாழ்வியல் சூழல்களை மாற்றவும் ஒரு வாய்ப்பை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்…
இந்நிலையில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடு உள்ளவர்களால் நிர்வகித்து நடத்த உள்ள இந்த மையம் உலகிலேயே முதன் முறையாக துவங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சஹா மையம் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..
இதனை தொடர்ந்து ஐன்ஸ்டீன் உலக சாதனக சான்றிதழை சிறப்பு குழந்தைகளுக்கு ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் கார்த்திக் குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் இயக்குனர் டாக்டர் மோனிகா ரோஷினி ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்…