தாராபுரம் செய்திகளை பிரபு
செல் :9715328420
தாராபுரம் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்ககோரி தீர்மானம்
திருப்பூர்,
தாராபுரம் நகராட்சி மாதாந்திர கூட்டம் ஊராட்சி தலைவர் பாப்புக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் ரவிச்சந்திரன், ஆணையாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:-தாராபுரம் நகராட்சிக்கு அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து எல்லை விரிவாக்கம் செய்வதற்கு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அரசாணை (நிலை) எண்.202 நாள் 31.12.2024 ன் படி அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி தாராபுரம் நகராட்சியுடன் கவுண்டச்சிபுதூர் மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகளை இணைப்பதற்கு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 20.12.2024-ம் தேதியன்று அரசுக்கு இவ்விரு ஊராட்சிகளையும், நகராட்சியுடன் இணைப்பதற்கு ஒப்புதல் கருத்துரு வழங்கப்பட்டது .அதற்கு பின்பு 31.12.2024 அன்று முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரசாணை(நிலை) எண் 202. நாள் 31.12.2024 ஆம் தேதியன்று தாராபுரம் நகராட்சியுடன் கவுண்டச்சிபுதூர் மற்றும் நஞ்சியம் பாளையம் ஊராட்சிகளை இணைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் தாராபுரம் நகராட்சியானது 110 ஆண்டுகள் நிறைவடைந்த பழமையான நகராட்சியாகும் இந்நகராட்சியில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக உள்ளது ஆனால் 110 ஆண்டுகளாக பரப்பளவில் ஒரு அங்குலம் கூட அபிவிருத்தி ஏற்படவில்லை இதனால் அருகில் உள்ள கவுண்டச்சிபுதூர் மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகள் நகராட்சி பகுதியை காட்டிலும் கூடுதலான தொழில் வளர்ச்சி, கட்டிட வளர்ச்சி, குடியிருப்பு பகுதிகள் என அனைத்து வகையிலும் நகராட்சியை விட கூடுதலாக வளர்ச்சி பெற்று உள்ளது.
தற்போது அருகிலுள்ள கவுண்டச்சிபுதூர், மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிகளில் நகரமயமாதல் அதிகமாகிவிட்டது. ஊராட்சி பகுதியின் பரப்பளவு குறைந்து விட்டது. அங்கு வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவுநீர் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் மின்சார வசதிகளை ஊராட்சிகளால் பூர்த்தி செய்ய இயலவில்லை.
இதனால் ஊராட்சி பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் அதனுடைய தாக்கம் நகராட்சியையும் பாதிக்கிறது. மேலும் அரசால் கொண்டு வருகின்ற திட்டங்களை செயல்படுத்தவும்,நகராட்சியில் போதிய இடவசதி இல்லாததால், புதிய திட்டங்களை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் பொருளாதார வளர்ச்சியின்றி, பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு மேற்கண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் பொதுமக்களின் பல வருட கோரிக்கையும் நிறைவேறும், நகராட்சி மற்றும் ஊராட்சிகள் இரண்டும் ஒன்றாக அபிவிருத்தி அடைய ஏதுவாக இருக்கும்.மேலும் தாராபுரம் நகராட்சியில் அடிப்படை திட்டங்களை நிறைவேற்ற 2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதில் 1 முதல் 20 வரையிலான வார்டுபகுகளில் தலா ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதி பணிகள்,ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் 2 பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் நகராட்சி பகுதியில் 7 கோபுர மின் விளக்குகள் அமைத்தல் வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள்,அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.