காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நமது இரங்கலைத் தெரிவித்தும், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கூட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரையும், வர்த்தக அணியின் மாவட்ட தலைவர் யூசுப் தொகுப்புரையும் வழங்கினர்.கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அணியின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜீபூர் ரஹ்மான் மற்றும் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் ஆகியோர் கண்டன உரையும் நிகழ்த்தினர்.
இறுதியாக கட்சியின் வடக்கு மாவட்ட பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்.
இதில் ஆண்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் திரளாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.