தாராபுரம், செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரபுத்தில் 200, பேர் பங்கேற்ற மௌனானந்தர் கலைக்குழு வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி ஏராளமானோர் கண்டுகளிப்பு.
வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை அரசு விழாக்களில் நடத்த அனுமதி வழங்க கோரிக்கை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் கிராமத்தில் காளியம்மன் கோவில் வளாகத்தில் மௌனானந்தர் கும்மி கலை குழுவினர் சார்பில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒரே இடத்தில் 200 கலைஞர்கள் கொங்கு ஒரே மாதிரியான பாரம்பரிய உடை அணிந்து வள்ளி கும்மியாட்டம் ஆடி விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர். இதைக் காண தாராபுரம், அலங்கியம் தளவாய்பட்டிணம் சத்திரம் கோவிந்தாபுரம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர்.
நிகழ்ச்சிக்கு வள்ளி கும்மி ஆசிரியர் வரப்பாளையம் சண்முகசுந்தரம், தலைமை வகித்தார்.கனகராஜ், ஈஸ்வரன், செல்வராஜ், ஆகிய இணை
ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கையில்
கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது.
கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. வைகாசியில் கொண்டாடப்படும் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர். நாட்டுப் புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்பி பற்றிய குறிப்புகள் உள்ளன.
திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது.
இதை மீட்டெடுத்து தற்பொழுது சிறப்பாக வள்ளி கும்மி கலை வளர்ந்து வருகிறது எனவும்.மேலும் அரசு விழாக்களில் வள்ளி கும்மியாட்டத்தை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் வள்ளி கும்மியாட்ட குழுவினரை நல வாரியத்தில் இணைக்க வேண்டும் இந்த பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டத்தை உலகறிய செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என இவ்வாறு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வள்ளிய கும்மியாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமதி என்ற பெண் தெரிவிக்கையில்
வள்ளி கும்மியாட்டம் மன அழுத்தத்தை குறைக்கிறது கடந்த காலங்களில் பெண்கள் அம்மி அரைப்பதும் மாவு ஆட்டுவதும் உரல் இடிப்பது மற்றும் வீடு கூட்டுவது துணி துவைப்பது என பல்வேறு வேலைகளை செய்து வந்தோம் ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அனைத்திற்கும் இயந்திரம் வந்துவிட்டது.
இதனால் பெண்களின் உடல் உழைப்பு குறைந்துவிட்டது ஆனால் இந்த வள்ளி கும்மியாட்டத்தின் மூலம் உட்கார்வது எந்திரிப்பது சுற்றுவது என கை, கால்கள் உடல்கள் அனைத்துமே அசைவு கொடுப்பதால் பெண்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
அது மட்டும் இன்றி பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள் வருவதில்லை பெண்களுக்கு உடல் நலமும் மன நலமும் ஆரோக்கியம் பெறுகிறது
மேலும் பள்ளி மாணவ மாணவிகள் வள்ளி கும்மியாட்டம் கற்றுக் கொள்வதான் மூலம் மூளை நன்கு வளர்ச்சி அடைகிறது அதிக அறிவுத்திறன் கிடைக்கிறது இதனால் சிறந்த மாணவ மாணவிகளாக அவர்கள் வருவதற்கு இந்த வள்ளி கும்மியாட்டம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
அரசு பள்ளிகளிலும் வள்ளி கும்மியாட்ட கற்றுக் கொடுக்க வேண்டும் அனைவரும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை தரும் என இவ்வாறு தெரிவித்தார்.