பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்

தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் ஹஸ்ரத் பாகர்ஷா ஒலியுள்ள பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரியில் அமைந்துள்ள ஹஸ்ரத் பாகர்ஷா ஒலியுல்லா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா முத்தவல்லி சேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு தப்ஸ் குழுவுடனும், பானுவா ஜமாத்துடன் கொடி ஊர்வலம், மற்றும் சந்தன குடத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பள்ளிவாசலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து பள்ளிவாசலின் அறங்காவலர்கள் கொடியில் சந்தனம் பூசி கொடியேற்றம் நடைபெற்று மலர் போர்வையை போர்த்தி சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் விழாவை ஒட்டி பள்ளிவாசல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகிகள் கிராமவாசிகள் செய்திருந்தனர்.