திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சிறுகுறு வணிகர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் மற்றும் திருவாரூர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விஜயபுரம் வர்த்தக சங்க பொதுச் செயலாளர் குமரேசன் தலைமையில் ஸ்விகி, அமேசான், டீமார்ட் உள்ளிட்ட ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களால் சிறு, குறு வணிகர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என வலியுறுத்தி ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
திருவாரூர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க மாவட்ட செயலாளர் நடனம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.