தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம் அலங்கியம் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தில்லையப்பன் கண்டன உரையாற்றினார். டி .என் .ஜி இ.ஏ வட்ட கிளை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார் நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அரசியல் சாசன சட்ட உரிமை, தொழிற்சங்க கூட்டு பேர உரிமை ஆகியவற்றை பறிப்பதை கண்டித்தும்.
தொழிற்சங்க கொடிமரம்,தகவல் பலகையை அகற்றியது,தொழிற்சங்கத்தின் மாநில துணை தலைவர் ச.மகேந்திரன் உள்ளிட்ட திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் தொடுத்து கைது செய்து, அடைத்து வைத்து மிரட்டல் விடுத்த திருச்சி கன்டோன்மென்ட் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்தும்.திருச்சி நெடுஞ்சாலைத்துறை க.ம.ப கோட்டப்பொறியாளர் கண்ணன், உதவிக்கோட்டப் பொறியாளர் புகழேந்தி ஆகியோர் ஆளும் அரசுக்கு எதிராக தொழிற்சங்ககத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து போராட்டத்தை தூண்டும் வகையில் செயல்படுவதை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் கோட்ட பொருளாளர் முருகசாமி நன்றி கூறினார்.