விருத்தாசலம்,
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் வரை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் வேண்டும். எடை தராசும், அலுவலக கணினியோடு இணைத்து ரசீது வழங்கிய பின்பு தான் நியாய விலைக் கடை எடை தராசை விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை அமைக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை கட்டணமாக வழங்கப்பட வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க ஐஏஎஸ் தலைமையில் ஊதிய குழு அமைத்து ஒன்பதாவது மாநில ஊதிய மாற்ற குழுவுடன் சேர்க்கப்பட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளையும், ஏற்கனவே நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் நேற்று விருத்தாசலம் தாலுக்கா அலுவலகம் முன்பு வட்ட அளவிலான வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிரகாஷ், பாலு, மதியழகன், கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நியாய விலைக் கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை கட்டணமாக வழங்கப்பட வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க ஐஏஎஸ் தலைமையில் ஊதிய குழு அமைத்து ஒன்பதாவது மாநில ஊதிய மாற்ற குழுவுடன் சேர்க்கப்பட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளையும், ஏற்கனவே நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் நேற்று விருத்தாசலம் தாலுக்கா அலுவலகம் முன்பு வட்ட அளவிலான வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பிரகாஷ், பாலு, மதியழகன், கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நியாய விலைக் கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.