பூரணாங்குப்பம் முழியன்குளம் சீரமைப்பு மற்றும் படித்துறை அமைக்கும் பணி தொடக்கம்

பூணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி புதுச்சேரி அரசு அனுமதியுடன் பல NGO-க்கள் மற்றும் நிறுவனங்கள் நிதி (CSR – Fund) பங்களிப்புடன் பூரணாங்குப்பம் கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் சுமார் 400 ஆண்டுக்கும் மேலான முழியன்குளம் சீரமைப்பு பணியின் தொடக்க நிகழ்ச்சி

தொடங்கியது.முன்னதாக தனசுந்தராம்பாள் சரி டெபுள் சொசைட்டி நிறுவனர் திரு. பனை ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார், கோவில் நிர்வாகி பாஸ்கர் முன்னிலை வகித்தார். கிராம பொதுமக்கள் தலைமையில்,சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் R . செல்வம் அவர்கள், உழவர்கரை நகராட்சி ஆணையர் திரு .A .சுரேஷ்ராஜ் அவர்கள் அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் திரு .V.ரமேஷ் அவர்கள் ஆகியோர் முழியன் குளத்தின் சீரமைப்பு பணியினை தொடங்கி வைத்தனர்.

இதில் முதல் தவணையாக சென்னை EXNoRA – இன்டர்னேஷ்னல் நிறுவனம் 60-நாட்கள் இலவசமாக இட்டாச்சி மெஷின் கொடுத்து உதவியுள்ளனர், நிகழ்வில் இந்தியன் வங்கி மேலாளர், சென்னை காயத்திரி சாரிட்டிஸ் நிறுவனர் K.பாலசுப்பரமணியன், சென்னை NDSO- அறங்காவளர் திரு. JP பிரபாகரன், அவர்கள் EXNo RA வாட்டர்பாடி தலைவர் திரு.V. சுப்பரமணி அவர்கள் சிவில் எஞ்சினியர் திரு .N. புருஷோத்தம்மன் அவர்கள், புதுவை EXNORA தலைவர் தசரதன் அவர்கள், சரோன் சொசைட்டி நிறுவனர் G. மோகன் அவர்கள், புதுச்சேரி ரோட்டரி கிளப்பீச்டெளன் தலைவர் திரு. S. வினோத் வர்மா அவர்கள் மற்றும் சிங்கப்பூர் எடோன் ஹவுஸ் பள்ளி ஆசிரியை திருமதி.கார்த்திக் பாலா, ஆகியோர் பங்குபெற்றனர். முடிவில் DSC_ சொசைட்டி தன்னார்வளர் திரு.மணி நன்றி கூறினார். விவசாய நிலத்திற்க்கு அடிப்படையாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் இந்த முழியன்குளம் 1 கோடி மதிப்பீட்டில் தூர் வாரி, சுற்றிலும் படித்துறை அமைத்து குடிநீர் ஆதாரமாக பாதுகாக்க முடிவு செய்யப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *