செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் தபால் பெட்டி சி.எஸ்.ஐ அருள் ஆலயத்தின் சார்பில் குருத்தோளை பவனி நடைபெற்றது.
இதில் மாதவரம் செபாஸ்டியர் ஆலயத்தின் பங்குத்தந்தை மைக்கேல் ஆனந்த், சிஎஸ்ஐ அருள் ஆலய தந்தை ஈஸ்டர் ராஜ், செங்குன்றம் ஆலய தந்தை சந்தோஷ் ஆகியோர்கள் குருத்தோளை தின பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்வை துவக்கி வைத்தனர்.
அதன்பின் தபால் பெட்டி பகுதியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைகளில் குருத்தோளைகளை ஏந்தி கிறிஸ்துவ ஜெப பாடல்களை பாடி வீதி வீதியாக பவனி வந்தனர். இந்நிகழ்வில் ஆலய நிர்வாகி பொன் டேவிட் சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.