பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து மாவட்ட சிறப்பு பொதுக்குழுகூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமணமண்டபத்தில் மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்கள் மாநில வன்னியர் சங்க தலைவர்,
புதாஅருள்மொழி மாநாட்டு பொறுப்பாளர்கள் ஸ்டீல் சதாசிவம் ஜோதிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் இதில் பாமக வன்னியர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் நகர செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.