கமுதி முத்துமாரியம்மனுக்கு பங்குனிபொங்கல் கொடியேற்றத்துடன் துவங்கியது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகரில் சத்திரியநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் வைபவும் காப்புகட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது
இரவு அம்மனுக்கு கும்பம் எடுக்கும் நிகழ்ச்சியும் வருகின்ற எப்ரல் 8ந்தேதி பொங்கல் பண்டிகையும் 9ந்தேதி அக்கினிசட்டி கரும்பாலை தொட்டி அங்கபிரதசனம் மற்றும் 11ந்தேதி பால்குடம் நிகழ்ச்சியும் 12ந்தேதி முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக குண்டாற்றில் சென்று கரைத்தலுடன் விழா நிறைவுபெறும் 11நாட்கள் நடைபெறும் விழாவிற்கு ஆந்திரா சென்னை காஞ்சிபுரம் திருச்சி காரைக்குடி மதுரை ராமநாதபுரம் பகுதியில் இருந்தும் சுற்றுவட்டார கிராமக்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள் நிகழ்ச்சிகளுக்கான எற்பாடுகளை நாடார் உறவின்முறையினர் செய்திருந்தனர்