பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுங்கச் சாவடி கட்டண உயர்வை மறு ஆய்வு செய்து பரிசீலிக்க வேண்டி பல் சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி வலியுறுத்தல்
பல் சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
தமிழ்நாட்டில் இன்று அமலுக்கு வந்துள்ளது
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 44 கட்டணக் கட்டுப்பாட்டு நெடுஞ்சாலைகளில் 5% முதல் 12% வரை கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் – ஏற்கனவே நெருக்கடியிலிருக்கும் போக்குவரத்து துறைக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்றும், பொதுமக்கள் மீது அதிக பொருளாதார அழுத்தம் ஏற்படும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டோல் கட்டண உயர்வு போக்குவரத்து செலவினங்களை அதிகரித்து, பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும் இதனால் வாழ்வாதார செலவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே, அரசாங்கம் இதை மீளாய்வு செய்து பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படாதவாறு மாற்று தீர்வுகளை பரிசீலிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..