V. சீராளன் செய்தியாளர் பண்ருட்டி
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட திடீர் குப்பம் பகுதியில் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடிவரும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்க உத்தரவு.
பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட திடீர் குப்பம் பகுதியில் சுமார் 35க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஆனால் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா இல்லாததால் நகராட்சி மூலம் கிடைக்கக்கூடிய பல்வேறு சலுகைகள் கிடைக்காமல் சென்று வந்தது.மேலும் பேரிடர் காலங்களில் நெல்லிக்குப்பம் பகுதிகளிலேயே முதன்மையாக பாதிக்கப்படும் பகுதியும் இதுவே.ஆகவே, அப்பகுதி மக்கள் பட்டா கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் மேற்படி இடங்களில் குடியிருந்து வரும் மக்களை நேரில் சந்தித்து ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் இடத்தின் அளவீடு,பெயர், முகவரி என அனைத்தையும் நேரில் ஆய்வு செய்து சுமார் 10ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பவர்களுக்கு மனைப்பட்டா வழங்கவும், குறைந்த ஆண்டுகள் வசிப்பவர்களுக்கு நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார். அதன்படி 35 மனைப் பட்டாக்களில் 3 மனைப்பட்டாக்கள் மட்டும் வேறுபாடுகள் இருப்பதாக உறுதி செய்து நிறுத்தி விட்டு மீதமுள்ள 33 மனைப் பிரிவுகளுக்கும் பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனால் இத்தனை ஆண்டுகள் பட்டா கேட்டு போராடிய மக்கள் மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.மேற்படி ஆய்வின் போது கோட்டாட்சியர் அபிநயா, தாசில்தார் ஆனந்த், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணராஜன், பொறியாளர் வெங்கடாசலம், மண்டல துணை வட்டாட்சியர் கிருஷ்ணன், துணை வட்டாட்சியர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் ஜான்சி ராணி, சர்வேயர் ஆய்வாளர் சுரேஷ், நகராட்சி சர்வேயர் நந்தகுமார், கிராம உதவியாளர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.