பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்

பாபநாசம் அருகே மணலூரில் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய பூச்சொரிதல் உற்சவ திருவிழா….ஏராளமான பெண்கள் பூச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணலூர் தெற்கு காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய பங்குனி மாத பூச்சொரிதல் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன்,ஏராளமான பெண்கள் பூச்சட்டி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
விழாவின் ஏற்பாடுகளை மணலூர் தெற்கு காளியம்மன் கோவில் தெரு கிராமவாசிகள் செய்திருந்தனர்.