எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் மாவட்ட அளவில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் 220 நபர்களுக்கு பணி ஆனையை வழங்கி சிறப்புரையாற்றினார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இதில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 தேர்வுக்காக நடத்திய கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 220 நபர்களுக்கு பாராட்டி பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் ஆகியோர் வழங்கினர் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல் சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் சீர்காழி நகராட்சி ஆணையர் செல்வி மஞ்சுளா வட்டாட்சியர் அருள்ஜோதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்