திருவெற்றியூர்.
திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பாஜக கட்சியை சேர்ந்த தமிழிசைவசவுந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பாஜக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், குளிர்பானங்களை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது,
என் தந்தை உடல் நல குறைவாக இருப்பதால் வடிவுடையம்மனை தரிசித்து பிரார்த்தனை செய்து விட்டு வந்துள்ளேன்.
தமிகத்தில் பாஜக தமிழுக்காக தான் போராடி கொண்டிருக்கிறது என தெரிவித்து கொள்கிறேன். புதிய கல்வி கொள்கையில் 5 ஆவது வரை 3 மொழிகள் பயில வேண்டும் என நாங்கள் கூறுகிறோம். நான் ஒரு தமிழ் அறிஞரின் மகள், நான் பயின்றது தமிழ் வழியில் தான். ஆனால் கனிமொழியோ, உதயநிதியோ, இன்பநிதியோ தமிழ் வழியில் பயின்றார்களா? அவர்கள் மட்டும் 3 மொழிகள் பயிலலாம். பணம் படைத்த செல்வர்கள் 3 மொழி பயிலலாம், ஏழை மக்கள் 3 மொழி பயில கூடாது என தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது.
நான் தமிழுக்கு எதிரானவர் எனவும், புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளையும் சிபிஎஸ்சி பள்ளியாக மாற்ற கையெழுத்திட்டேன் என ஐலியோனி கூறுயிருக்கிறார். என்னை தமிழின துரோகி என நீங்கள் கூறினால் தமிழகத்தில் சிபிஎஸ்சி பள்ளி நடத்தும் முதல்வரின் மகள், அமைச்சர்கள் தமிழின துரோகிகளா?
புதுச்சேரியில் தமிழ் புத்தகம் வாங்கப்படவில்லை என பாடநூல் கழகத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்று வரை புதுச்சேரிக்கு தமிழ் பாடநூல் சென்று கொண்டிருக்கிறது. இதனை முதல்வர் அறியாத நிலையில் தகுதியானவர்களை முதல்வர் சம்பந்தப்பட்ட துறையில் பணியமர்த்த வேண்டும்.
நாங்கள் தமிழின பாதுகாவலர்கள். அதனால் தான் 5 ஆவது வரை 3 மொழிகள் பயல வேண்டும். எங்களை தமிழின துரோகிகள் எனக்கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
நாங்களும் மத நல்லிணக்க அடிப்படையில் இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். வக்பு வாரியம் ஏழை, எளிய மக்களின் இடங்களை அபகரித்து கொண்டதால் அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் என். எல்.நாகராஜ் மாவட்ட பொதுச் செயலாளர் த. ஜெய்கணேஷ் முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் முன்னாள் மண்டல் தலைவர் எஸ் .கே. டி .ரவி வரதன், பூபாலன் பூமிநாதன், சீனிவாச ரெட்டி, மற்றும் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்