வலங்கைமானில் பருவம் தவறி பெய்த கனமழையால் நெல், பயிறு, உளுந்து, எள்ளு, பருத்தி ஆகிய பணப் பயிர்கள் அழிந்துவிட்டது அதற்கு முறையான கணக்கெடுப்பு உடன் நிவாரண வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில், பருவம் தவறி பெய்த மழையின் காரணத்தால் நெல், பயிறு, உளுந்து, எள்ளு, பருத்தி பணப் பயிர்கள் அழிந்துவிட்டது, பயிர்களுக்கு முறையாக கணக்கெடுத்து உடன் நிவாரணம் வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது,
100 நாள் வேலை செய்து ஐந்து மாதங்கள் ஆகியும் விவசாய தொழிலாளிகளுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையை கண்டித்தும், உடனே வழங்க வேண்டியும், மூன்று முறை சமாதான கூட்டம் நடத்தி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி தருவதாக கையொப்பமிட்டு இன்று வரை செயல்படுத்தாதவை கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் தலைமையில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.ஆர். ஜோசப், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு. ராஜா ஆகியோர் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார்கள்.
மாவட்ட குழு உறுப்பினர் ரங்கராஜன், ஒன்றிய துணை செயலாளர் கே. செல்வராஜ், உதயகுமார், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்ன ராசா, ஒன்றிய தலைவர் எம். கலியபெருமாள், ஏ ஐ ஒய் எப் ஒன்றிய செயலாளர் வி. பாக்கியராஜ், விவசாய தொழிலாளர் சங்க பொருளாளர் ஏ. மருதையன், சுமை தூக்கும் பணியாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஏ ஐ ஒய்ஃப் ஒன்றிய தலைவர் சுதாகர் உள்ளிட்ட 65 பெண்கள் உட்பட 190 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் உள்ள அரசு மதுபான கடை எடுக்க வேண்டும், 43. ரெகுநாதபுரம் கிராமத்தில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வடக்கு பட்டம் வெள்ளக்காரப் புறம்போக்கில் (தெருவில்) வசிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் மாதம் 5- ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் அறிவித்தார். முடிவில் வலங்கைமான் நகர செயலாளர் பி. ராதா நன்றி கூறினார்.
Leave a Reply