உலக நீர் தினத்தை முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சென்னாவரம் இணைந்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வில்லுப்பாட்டு விழிப்புணர்வை பள்ளி வளாகத்தில் நடத்தினர்.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட அரிமா சங்க தலைவர் இரா. சரவணன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற வட்டாட்சியரும், முன்னாள் இராணுவ வீரருமான வ.முருகானந்தம் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் வில்லுப்பாட்டு நிகழ்வை புலவர் மா. இரகுபதி குழுவினர் நிகழ்த்தினர். மிருதங்க வித்துவான் ஆராசூர் கோ.மூர்த்தி, இசைப் பாடகர் க.முருகன், ஆர்மோனியம் கலைஞர் கு.ராஜ்குமார் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம.சுரேஷ் பாபு, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
Leave a Reply