பாபநாசத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் அவரது உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய பேரூர் சார்பில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாபநாசம் அண்ணா சிலை அருகில் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு அவரது உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன்,பேரூர் கழக செயலாளர் கபிலன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய கல்வித்துறை அமைச்சரின் உருவ பொம்மையை எரித்தும் செருப்பால் அடித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Share this to your Friends