மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா பள்ளப்பட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார் குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் முன்னிலை வகித்தார்.
குழுமத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில், தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி முதல்வர் தமிழரசு , ஆங்கில மொழி பயிற்றுநர் ஆனந்தன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட ஆளுநர் சிவக்குமார், நாமக்கல் அசோக் லேலண்ட் நிறுவனம், ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் மற்றும் தலைவர் சுரேந்திரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
நிறைவாக விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு குழுமத்தின் தாளாளர் நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பாலிடெக்னிக் கல்லூரி கட்டிடவியல் துறைத் தலைவர் இராஜீவ் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைத் உதவிப் பேராசிரியர் இல.சதீஷ் நன்றி கூறினார். தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.