சென்னை மணலியில் இந்து முன்னனி சார்பில் 7500 புத்தகத்தில் செய்யப்பட்ட வித்யா கணபதி விநாயகர் சிலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மணலி புதுநகர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அய்யா கோயில் அருகே இந்து முன்னனி சார்பில் ரூ.8 லட்சம் செலவில் 5 ஆயிரம் பகவத் கீதை, 1500 வேல் விருத்தம், 1008 முருக கவச புத்தகங்களான விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னனி சார்பில் 6 ஆவது முறையாக வைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலை 5 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிற்று கிழமை விநாயகர் சிலையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
கணபதி ஹோமம் செய்யப்பட்டு விநாயகரின் கண்கள் திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்களை கவரும் வகையில் கர்நாடக சங்கீத குழுவின் ராக பைரவி இசைக்கச்சேரி நடத்தப்பட்டது.
