லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இறுதி போட்டியில் இந்தியன் வங்கி மற்றும் கேரள மின்சார வாரிய அணியினர் நாளை பலப்பரீட்சை

கோவையில் 59 – ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பைக்கான ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டி, கடந்த 23-ம் தேதி முதல்,
பி.எஸ்.ஜி. இன்ஜினியரிங் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில். நடைபெற்று வருகின்றது..

நான்கு நாட்களாக பல்வேறு சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்றன..

இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி முதலாவது போட்டியில் இந்தியன் வங்கி அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடியது.

இதில் இந்தியன் வங்கி அணி 88 – 58 என்ற புள்ளி கணக்கில் வென்று,முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில்,தன்னை எதிர்த்து விளையாடிய இந்திய விமானப்படை அணியை, கேரள மாநில மின்சார வாரிய அணி 78 – 71 என்ற புள்ளி கணக்கில் வென்று இரண்டாவது அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது..

நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில், இந்தியன் வங்கி மற்றும் கேரள மின்சார வாரிய அணியினர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்..

இறுதிப் போட்டியில் வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு இலட்சம் ரொக்க பரிசு வழங்க உள்ளது குறிப்பிடதக்கது…