புதுச்சேரி
உலகத் தமிழர்களின் வாழ்வியல் கலாச்சாரம் பண்பாடு நிறைந்த பனை மரம் மீட்பு பயணத்தில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி & பீயிங் (Being) பாண்டிச்சேரி பவுண்டேசன் இணைந்து சென்னை M.N. காயத்திரி சாரிட்டீஸ் உதவியுடன் பாண்டி மெரின பீச் பகுதியில் 1000 பனை விதை நடும் பணி நடைபெற்றது.


நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாக புதுச்சேரி முன்னால் உழவர்கரை நகராட்சி ஆணையர் மற்றும் செய்தி & விளம்பரத் துறை இயக்குனர் சுரேஷ்ராஜ் . PPPWS – மகளிர் குழுத்தலைவி கலாவிசு குழுவினர், முன்னால் ராணுவ வீரர் .veteran ராமமூர்த்தி, மீணவம் காப்போம் குழு .செல்வம் ஆகியோர் பங்கு பெற்றனர்.

நிகழ்சிக்கான ஏற்பாடுகளை தனசுந்தரம்பாள் சாரி டெபுள் சொசைட்டி தலைவர் பூரணாங்குப்பம் “பனை” ஆனந்தன் குழுவினர் மற்றும் பீயிங்(Being)பாண்டிச்சேரி பவுண்டேசன் தலைவர் சிவக்குமார் குழுவினர் செய்திருந்தனர், மெரினா பீச் லைட் அவுஸ் பகுதியை சுற்றி பனை விதை நடவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *