பொள்ளாச்சியில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இளநீர் பானத்திற்கு உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் அமோக வரவேற்பு உள்ளதாக உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார்
பொள்ளாச்சி
உலகின் மிகப்பெரிய தேங்காய் உற்பத்தி நாடான இந்தியா, தேங்காய் பொருட்களிலிருந்து ஆண்டுக்கு ₹30,000 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டுகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்படும் சக்தி கோகோ ப்ராடக்ட்ஸ் எனும் நிறுவனத்தை 1981-ல் சி.எம். காமராஜ் என்பவரால் தொடங்கினார்
பொள்ளாச்சி விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த காமராஜ், தனது தொழில் நுண்ணறிவைப் பயன்படுத்தி தேங்காய் பதப்படுத்தும் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். பிரிட்டானியா போன்ற பிஸ்கட் தயாரிப்பதற்கு தேவையாைன தரமான தேங்காய் பவுடர்க்கு நற்பெயரை நிலைநாட்டியது.
அடுத்த கட்டமாக நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 2003-ல், சக்தி கோகோ ப்ராடக்ட்ஸ் இந்தியாவில் பாட்டில் மூலம் இளநீரை தயாரித்து அறிமுகப்படுத்தினார்
பல்வேறு தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு நிறுவனங்களின் வழிகாட்டுதழின் படி தொடங்கப்பட்ட நிறுவனம் தற்போது நாள்தோறும் 1,00,000 இளநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகிறது
மேலும் மற்றொரு தயாரிப்பான இளநீருடன் சிறிய தேங்காய் துண்டுகளை சேர்த்து சுவைக்காக ஆரஞ்ச், திராட்சை என பல்வேறு சுவைகளுடன் தயாரிக்கப்படும் பானங்கள் தினம்தோறும் 50 ஆயிரம் பாட்டில்கள் தயாரிக்கப்படுகிறது
இவ்வகை பானங்கள் வட மாநிலங்களில் அதிகளவில் விற்பனையாகிறது 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு தற்போது பிரபலமடைந்து வருகிறது இளநீரில் இருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வித ரசாயனம் இன்றி தயாரிக்கப்படுவதால் தென்னை நகரம் என பெயர் பெற்ற பொள்ளாச்சிக்கு மேலும் ஒரு சிறப்பு கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது குறித்து சக்தி கோ கோ நிறுவனர் கூறும்போது இளநீரை பாட்டிலில் அடைத்து தயாரிக்கப்படும் பானங்களுக்கு தற்போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பிரபலமடைந்து வருகிறது.
ரசாயனம் கலந்த கோ- கா கோலா, பெப்ஸி போன்ற பானங்களை விட உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத இளநீர் மூலம் தயாரிக்கப்படும் பானங்கள் தென்னை நகரம் எனும் பொள்ளாச்சியில் தயாரிக்கப்படுகிறது
இத்தொழில் மேம்பட GSTவரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தார்
